தமிழ்த்துறை
‘தீட்டிவிடும் கல்வி போட்டியிடும் உள்ளம்’ என்பதே தமிழ்த்துறையின் கல்விக் கொள்கையாகும். இதற்கேற்பப் பல்கலைக்கழகத் தேர்வுகளில் சிறந்த தேர்ச்சி பெறவும் தமிழகம் எங்கும் நடைபெறும் பல்வேறு இலக்கியப் போட்டிகளில் கலந்து கொள்ளவும் எம்துறை மாணவியர்க்குச் சிறந்த பயிற்சியும் போதிய வசதிகளும் தரப்படுகின்றன. தொடக்கத்திலிருந்தே ஆய்வுச் சூழலை அறிமுகப்படுத்தும் விதமாக ஒவ்வொரு பருவத்திலும் பயிலரங்கோ அல்லது கருத்தரங்கோ கல்லூரி யளவில் நடத்தி எம் துறை மாணவியர்க்கு ஆய்வுக் கட்டுரை எழுதும் பயிற்சி அளிக்கப்படுகிறது. உலகமே உள்ளங்கையில் உழல்கிற இன்றைய காலத்தில் உலகத்தொடர்பு ஏற்படுத்துவது மிகமிகத் தேவையான ஒன்றாகும். இதனைக் கருத்தில் கொண்டு ‘பன்னோக்குப் பார்வையில் தமிழும் தமிழரும்’ எனும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கத்தைத் (International Seminar) தமிழ்த்துறை வெற்றிகரமாக 19.09.2014 அன்று நடத்தி முடித்தது. அமெரிக்கா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளிலிருந்து ஆய்வுக் கட்டுரைகள் இக்கருத்தரங்கத்திற்கு வந்து குவிந்தன. இந்திய அளவிலிருந்தும் பேராசிரியப் பெருமக்களும் பிற கல்லூரி மாணவியரும் கலந்து கொண்டனர். ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்திய ஒரே துறை தமிழ்த்துறை மட்டுமே என்பது இத்துறையின் சிறப்புகளுள் முதன்மை யானது எனலாம். கல்லூரியளவில் ஆண்டுதோறும் பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி கவிதைப் போட்டி நடத்தி மாணவியரின் கூடுதல் திறத்தைப் புலப்படுத்தி வருகிறது தமிழ்த்துறை. போட்டிகளில் வெற்றி பெறும் மாணவியர்க்குக் கல்லூரி ஆண்டுவிழாவில் எம் தாளாளர் தவத்திரு. ஆத்மானந்த அடிகளார் பரிசு வழங்கிச் சிறப்பிப்பார். பாரதியார் பாவாணர் மறைமலையடிகள் முதலிய பல்வேறு தமிழ் அறிஞர்களின் பிறந்தநாளை இத்துறை தவறாது கொண்டாடி மாணவியர்க்கு அவர்தம் கருத்துகளைப் பரப்பி வருகிறது. முதுமுனைவர் இளங்குமரனார், தமிழறிஞர் சிலம்பொலி சு. செல்லப்பனார் முதலிய தமிழ் அறிஞர்களும்,
முனைவர் தமிழ்மாறன் (பெரியார் பல்கலைக்கழகம்)
முனைவர் தமிழகன் (நாட்டார் கலை அறிவியல் கல்லூரி)
முனைவர் திருமாறன் (நாட்டார் கலை அறிவியல் கல்லூரி)
முனைவர் சொ. சுடலி (சென்னை பச்சையப்பன் கல்லூரி)
முனைவர் இராஜேஸ்வரி (கேரளா பல்கலைக்கழகம்)
முனைவர் மாது (சேலம் அரசுக் கலை அறிவியல் கல்லூரி)
முனைவர் வசந்தமாலை (பெரியார் பல்கலைக்கழகம்)
முதலிய தமிழ்ப்பேராசிரியர்கள் பலரும் துறை சார்பாக எம் கல்லூரிக்கு வருகை புரிந்து சிறப்பித்துள்ளனர்.